கேஜ்ரிவாலில் அதிரடி நடவடிக்கை! பரபரப்பாகும் டெல்லி

kejriwalசிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக டெல்லி அரசின் அலுவலர்கள் எண்ணிக்கையைக் குறைக்க முதல்வர் கேஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார்.

ஏற்கெனவே அரசு அதிகாரிகள் நியமனத்தில் மத்திய அரசுக்கும், டெல்லி அரசுக் கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தால் புதிய சர்ச்சை கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து டெல்லி மாநில உயர் அதிகாரிகள்  அலுவகம் கருத்து வெளியிடுகையில்,

“டெல்லி மாநில அரசின் பல்வேறு துறைகளில் தேவைக்கு அதிகமாக அலுவலர் கள் இருப்பதாகவும், இவர்களுக் காக அரசு செய்யும் செலவு வீணா வதாகவும் முதல்வர் கருதுகிறார்.

எனவே, அலுவலர்கள் எண்ணிக்கையை குறைக்கும் பொருட்டு அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ள பணி மற்றும் அதை முடிக்க செலவாகும் நேரம் ஆகியவை குறித்து ஆய்வு நடத்த உத்தரவிட்டுள்ளார். இதனால் அவருக்கு புதிதாக தலைவலி வருமே தவிர எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை” என்றனர்.

கடந்த நான்கு மாதங்களாக டெல்லி அரசின் நிர்வாக சீர்திருத்தத் துறையின் சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு தொடர்பான அறிக்கை கேஜ்ரிவாலிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் டெல்லியின் குடிநீர் வாரியம், தொழில் துறை, பொதுப்பணித் துறை, பொது விநியோகம், மற்றும் அரசு ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஆகிய வைகளில் தேவைக்கும் அதிக அளவில் ஊழியர்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு, பல துறைகளில் அலுவலர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதுடன், தனது பணிகளை குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்காத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கேஜ்ரிவால் திட்டமிட்டுள்ளார்.

ஏற்கெனவே, டெல்லி அரசு உயர் அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் செய்யும் விவகாரத்தில் முதல்வர் கேஜ்ரிவாலுக்கும் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்குக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது.

இந்த நிலையில் அலுவலர்கள் எண்ணிக்கையைக் குறைத்தால் மேலும் புதிய சர்ச்சை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-http://www.newindianews.com

TAGS: