நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்கு தடை: மோடிக்கு முஸ்லிம் தலைவர் கடிதம்

cowபுதுடில்லி : மாட்டிறைச்சிக்கு தடை விதிப்பது தொடர்பாக, பரவலாக சர்ச்சை வெடித்துள்ள நிலையில், இத்தடையை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டுமென வலியுறுத்தி, முஸ்லிம் மதத் தலைவர்களில் ஒருவரான, மவுலானா தவுகீர் ரஸாகானா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பா.ஜ., ஆளும் மகாராஷ்டிராவில், மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை எதிர்த்து, மாட்டிறைச்சி வியாபாரிகளும், எதிர்க்கட்சியினரும் கண்டனம் தெரிவித்து, போராட்டங்களில் ஈடுபட்டனர். இருப்பினும், அம்மாநிலத்தில், மாட்டிறைச்சிக்கான தடை தொடர்ந்து அமலில் உள்ளது.

இந்நிலையில், இத்தேஹாத் இ – மிலாத் கவுன்சில் என்ற முஸ்லிம் அரசியல் அமைப்புத்
தலைவரான, மவுலானா தவுகீர் ரஸாகான், பிரதமர் நரேந்திர மோடிக்கு, கடந்த மே 2ல், கடிதம்
எழுதியுள்ளார்.

அதுகுறித்து, நிருபர்களிடம் நேற்று ரஸாகான் கூறியதாவது:

மாட்டிறைச்சிக்கு நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்
எழுதியுள்ளேன். என் கடிதத்துக்கு பதில் கிடைப்பது முக்கியம் அல்ல. மாடுகள் கொல்லப்
படுவது தொடர்பாக, முஸ்லிம்கள் தாக்கப்பட்டு வருகின்றனர். இதனால், மாட்டிறைச்சிக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்பட வேண்டியது அவசியம். இதை வலியுறுத்தி, அடுத்த மாதம், டில்லி, ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளேன். எங்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள, அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். பிற மதங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் என்னை தொடர்பு கொண்டு, ஆதரவு அளிப்பதாக உறுதி கூறியுள்ளனர்.

மாட்டிறைச்சியால் நோய் வரும் எனக் கூறப்படுகிறது. அப்படி இருக்கையில், அதை தின்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை. மேலும், இதனால், சமுதாயத்தில் தேவையற்ற பதற்றம் ஏற்படுகிறது. இவ்வாறு, ரஸாகான் கூறினார்.

-http://www.dinamalar.com

TAGS: