ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையை கவரும் உலக யோகா தினம்: 200 கோடி மக்கள் பங்கேற்பு!

idy_001உலக யோகா தின விழாவில் உலகின் 192 நாடுகளை சேர்ந்த 200 கோடி மக்கள் பயங்கேற்பார்கள் என்று அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தெரிவித்துள்ளார்.

ஐநா சபை தலைமை அலுவலகத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வரும் யூன் 21ம் திகதிஉலக யோகா தின விழாவினை தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் அசோக் முகர்ஜி கூறுகையில், முதன்முறையாக கொண்டாடப்படும் உலக யோகா தினத்திற்காக சிறப்பான ஏற்பாடுகள் உலகெங்கும் தீவிரமாக நடந்து வருகிறது.

ஐநா தலைமை அலுவலகத்தில் தொடங்கி வைக்கப்படும் விழாவில் ஐநா பொதுச் செயலாளர் பான்-கீ-மூன், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

பாகிஸ்தான், சவுதி அரேபியா, மலேசியா உள்பட உலகின் 192 நாடுகளில் உள்ள 256 நகரங்களில் யூன் 21ம் திகதி உலக யோகா ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

இந்த கொண்டாட்டங்களில் பங்கெடுக்கும் மக்களின் எண்ணிக்கை 200 கோடியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

-http://www.newindianews.com

TAGS: