தமிழ் நாட்டுக் குழந்தைகள் கடத்தப்பட்டு கேரளாவில் விற்பனை:தேசிய மனித உரிமைகள் ஆணையம்

தமிழ் நாட்டுக் குழந்தைகள் கடத்தப்பட்டு கேரளாவில் விற்பனை செய்யப்படுவதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று, இரு மாநில அரசுகளுக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தின் சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள், கேரளாவுக்கு வீட்டு வேலைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு வீட்டு வேலைக்கு ஏலம் விடப்படுவதாகத் தகவல்கள் வெளியாகின. அதோடு வீட்டு வேலைக்கு என ஏலம் எடுக்கப்படும் சிறுமிகள் பாலியல் பலாதகாரத்துக்கு உள்ளாக்கப்பட்டு துன்புறுத்தப் படுவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனைத் தாமாக முன்வந்து விசாரித்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் இதுத் தொடர்பாக 4 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலர், கேரள தலைமைச் செயலர் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

-http://www.4tamilmedia.com

TAGS: