தின்று கொழுத்த பணக்காரர்களுக்குத்தான் யோகா! ஏழைகளுக்கு தேவையில்லை! லாலுவின் லொள்ளு!!

lalu-prasad-yadav

பாட்னா: யோகா உண்மையில் ஏழைகளின் பணத்தை தின்று கொழுத்த பெரும் பணக்காரர்களுக்குத்தான் அவசியம் என்று ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலுபிரசாத் கூறியுள்ளார். லாலுபிரசாத் யாதவ் இது குறித்து மேலும், கூறியதாவது…

‘யோகா வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கும் ஏழைகளுக்கும் தேவையில்லை. ஏன்னென்றால் அவர்களுக்கு உடலில் கொழுப்பு இல்லை. நாட்டில் பல கோடி மக்கள் உண்ண உணவு கூட இன்றி தவிக்கிறார்கள்.

அவர்களுக்கு முதலில் தேவை உண்ண உணவும் வாழ்வதற்கு வழியும் தான், நிலம் இல்லாத விவசாயிகள், தொழிலாளர்கள், பால் வியாபாரி, ரிக்ஷாகார்களுக்கெல்லாம் தொப்பை இல்லை ஏனென்றால் அவர்கள் கடின உழைப்பாளிகள், அவர்கள் யோகா செய்ய வேண்டிய அவசியம் என்ன?

பா.ஜ.க தலைவர் அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்களுக்குத்தான் கொழுப்பு அதிகம் உள்ளது எனவே அவர்கள் யோகா செய்யட்டும் இவ்வாறு லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: