சர்வதேச யோகா தினம்: யோகா ஒரு அறிவியல் கலை: பிரணாப் முகர்ஜி உரை

சர்வதேச யோகா தினத்தையொட்டி, புதுதில்லி ராஜ்பாத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேசும் போது யோகா நம்மை நோயிலிருந்து விடுவிப்பது மட்டுமல்ல; நோயிலிருந்து காப்பதும் யோகா; பல நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த யோகா பயிற்சி அல்ல; அது ஒரு அறிவியல் கலை. என்று கூறினார்.

அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் உள்பட உலகம் முழுவதும் இன்று யோகா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்தியாவில் 650 மாவட்டங்களிலும், உலகின் 193 நாடுகளில் 192 நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. (போர் காரணமாக ஏமனில் யோகா தின கொண்டாட்டம் இல்லை.

நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐ.நா. தலைமையகத்தில் இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதில், பொதுச்செயலாளர் பான் கி மூன், பொதுச்சபை தலைவர் சாம் குட்டேசா, மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோர் பேசுகிறார்கள்.

இதற்காக சுஷ்மா சுவராஜ், ஏற்கனவே நியூயார்க் புறப்பட்டு சென்று விட்டார். தொடர்ந்து டைம்ஸ் சதுக்கத்தில், யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் 30 ஆயிரம் பேர் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்கிறார்கள்.

-http://www.dinamani.com

TAGS: