பழைய இரும்புச் சாமானுக்கு பேரீச்சம் பழம்… விஜய் மல்லையாவுக்கு வந்த நிலை

பழைய இரும்புச் சாமானுக்கு பேரீச்சம் பழம் கொடுக்கும் கடை ஒன்றில், தனது குட்டி விமானம் ஒன்றை விற்று, அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு மும்பை விமான நிலையத்துக்கு கடன் பாக்கியை செலுத்தியுள்ளார் விஜய் மல்லையா.

மதுபானம் மற்றும் விமான சேவை என பல தொழில்களை செய்து வந்த விஜய் மல்லையாவுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

இதன் விளைவாக, அவரது தனிப் பயன்பாட்டு விமானம் ஒன்று பழைய இரும்புச் சாமான் கடையில் விற்கப்பட்டு, அதில் வந்த பணத்தை, மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு இருந்த கடன் பாக்கிக் கட்டப்பட்டுள்ளது.

ரூ.22 லட்சம் மதிப்புள்ள குட்டி விமானம், பாகம் பாகமாக பிரிக்கப்பட்டு பழைய இரும்புச் சாமான் கடையில் விற்கப்பட்ட செய்தியைப் படித்ததும், பலருக்கும் கரகாட்டக்காரன் படத்தில் வரும் காரும், “பழைய இரும்புச் சாமானுக்கு பேரீச்சம் பழம்” என்ற குரலும்தான் நினைவுக்கு வரும்.

-dinamani.com

TAGS: