ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா மேல்முறையீடு!

jayalalitha_001ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் 4,000 பக்கங்களை கொண்ட மேல்முறையீட்டு மனுவை இன்று தாக்கல் செய்துள்ளது.

ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

பின்னர் இது தொடர்பான மேல் முறையீட்டு மனு மீதான வழக்கு, பெங்களூரு உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்றது.

இதில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், சொத்து குவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முழுமையானவை இல்லை.

சொத்துக் கணக்கீட்டில் 10 சதவீதம் வரை முன்பிருந்த சொத்தின் அளவைக் காட்டிலும் அதிகம் இருக்கலாம் என்ற முந்தைய தீர்ப்பை உதாரணம் காட்டி ஜெயலலிதா உள்பட 4 பேரையும் நீதிபதி குமாரசாமி, கடந்த மே மாதம் 11ம் திகதி விடுதலை செய்து உத்தரவிட்டார்.

நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு கடுமையாக விமர்சிக்கப்பட்ட தை அடுத்து அந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்தது.

இந்நிலையில், உச்சநீதி மன்றத்தில் கர்நாடக அரசு இன்று மேல்முறையீடு செய்துள்ளது.

இதற்காக, 4,000 பக்கங்கள் கொண்ட மனுவை கர்நாடக அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், சட்டவிரோதமாக ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

சொத்துக்களை கணக்கிடுவதில் தவறு நடைபெற்றுள்ளதாக கூறியுள்ள கர்நாடகா, ஜெயலலிதா வருவாய்க்கு எதிராக 76 சதவீதம் சொத்து சேர்த்துள்ள நிலையில், 8.12 சதவீதம் சொத்து சேர்க்கப்பட்டுள்ளதாக தவறாக கணக்கிடப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளது.

-http://www.newindianews.com

TAGS: