தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு வரும் கடத்தல்கார்களை தமிழக டிஜிபி, கலெக்டர்கள் தடுக்க வேண்டும் என்று ஆந்திர மாநில செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு கடிதம் அனுப்பியுள்ளது.
ஆந்திர மாநில செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவான டாஸ்க்போர்ஸ், தமிழக டிஜிபி மற்றும் கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:கடந்த சில வாரங்களில் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ராயசோட்டியில் 7 பேரும், பாலபல்லி, கோடூரு பகுதியில் 8 பேரும், சித்தூர் மாவட்டம் சந்திரகிரியில் 5 பேரும் செம்மரம் வெட்டவந்து பிடிபட்டுள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. தேசிய சொத்தாக கருதப்படும் செம்மரங்களை வெட்ட ஆந்திரா மற்றும் தமிழகத்தை சேர்ந்த செம்மரக்கடத்தல்காரர்கள் மலைவாழ் மக்களுக்கு பணத்தாசை காட்டி தொடர்ந்து நூற்றுக்கணக்கான கூலித்தொழிலாளர்களை அழைத்து வருகின்றனர். இதனை தடுக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது. செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட தர்மபுரியை சேர்ந்த சிவக்குமார் என்பவரை கைது செய்ய முடிவு செய்துள்ளோம். இதற்காக 3 முறை கடிதம் அனுப்பியுள்ளோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
-http://www.nakkheeran.in

























