குடி தண்ணீர், சமையல் எண்ணெய், பால் பொருட்கள் மீதும் தர ஆய்வு: மத்திய அரசு உத்தரவு

india_002சென்னை: மேகி நூடுல்ஸ்க்கு தடைவிதிக்கப்பட்டதை தொடர்ந்து பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்படும் குடி தண்ணீர், சமையல் எண்ணெய், பால் பொருட்கள் மீதும் தர நிர்ணயத்தை ஆய்வு நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நெஸ்லே நிறுவத்தின் மேகி நூடுல்ஸ் உள்ளிட்ட 9 வகையான உணவுப் பொருள்களுக்கு பல்வேறு மாநிலங்களில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அந்த உணவுப் பொருள்களில் சுவைக்காக சேர்க்கப்படும் மோனோசோடியம் குலுகோமெட்டின் அளவு நிர்ணயிக்கப்பட்டதை வி்ட அதிகமாக இருப்பது

கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாடுமுழுவதும் பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்படும் குடிநீர், சமையல் எண்ணெய் மற்றும் பால்

பொருட்களை ஆய்வு செய்ய மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரம் நிர்ணய ஆணையம் அறிவுறுத்தயுள்ளது.

இந்த ஆணையம் மாநில அரசின் கட்டுபாட்டில் உள்ள உணவு ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில்  பாக்கெட்டில் விற்பனை செய்யும்

அனைத்து வகையான உணவு பொருட்களின் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பி தர நிர்ணயத்தை ஆய்வு சோதனை செய்யுமாறு தெரிவித்துள்ளது.

இதற்கான நடவடிக்கைகளில் உணவுத் தரஆணையர்கள் விரைவில் இறங்குவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

-http://www.dinakaran.com

TAGS: