தனது ஒளிபரப்பை நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சன் நெட்வொர்க் நிறுவனம்

suntv_001இந்தியாவின் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனமான சன் நெட்வொர்க் தனது ஒளிபரப்பை நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சன் நெட்வொர்க் நிறுவனம் மீது பதிவு செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்குகளின் காரணமாக உள்துறை அமைச்சகம், இந்நிறுவனத்தின் 33 சேனல்கள் மீதான பாதுகாப்பு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

இவ்விவகாரத்தை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமை வகிக்கும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை மறுபரிசீலனை செய்யுமாறு உள்துறை அமைச்சகக்திற்கு வேண்டுகோள் விடுத்தது.

இந்நிலையில் பாதுகாப்பு ஒப்புதல்களைப் பெறவும் பிரதமர் அலுவலகத்தைச் சன் நெட்வொர்க் நிறுவனம் நாடியது.

ஆனால் 33 சேனல்கள் மீதான உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு ஒப்புதல் மறுப்பை, பிரதமர் அலுவலகமும் (PMO) ஆதரித்துள்ளது.

இதுகுறித்துப் பிரதமர் அலுவலகத்தின் செயலாளர் நிர்பென்திரா மிஸ்ரா கூறுகையில், சன் டிவி குறித்த விடயத்தில், உள்துறை அமைச்சகத்தின் முடிவு சரியானதாகவே உள்ளது என தெரிவித்துள்ளார்.

இதனால் சன் நெட்வொர்க் தனது ஒளிபரப்பை நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

-http://www.newindianews.com

TAGS: