10 கோடி மரக்கன்றுகள் நட சத்தீஸ்கர் அரசு முடிவு

vikneswaran_tree_001சத்தீஸ்கரில் பருவமழைக் காலமான தற்போது, மாநிலம் முழுவதும் 10 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கு அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ராய்ப்பூரில், முதல்வர் ரமண் சிங் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அரசுத் துறைகள் 8 கோடி மரக்கன்றுகளை நடும் பணியை மேற்கொள்ளும். மீதமுள்ள 2 கோடி மரக்கன்றுகளை தனியார் அமைப்புகளும், தொழிலகங்களும் நடும்.

முதல்வர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், “பிரபல எழுத்தாளர் பிரேம்சந்தின் பிறந்த தினத்தில் (ஜூலை 31) மரக்கன்றுகளை நடும் பணியை அனைத்து மாவட்டங்களிலும் தொடங்க வேண்டும். அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்’ என்று முதல்வர் உத்தரவிட்டார் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

-http://www.dinamani.com

TAGS: