பீகாரில் 2 மாணவர்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்தததையடுத்து பள்ளி முதல்வரை, கிராம மக்கள் அடித்தே கொன்றுள்ளனர்.
நாலந்தாவை அடுத்த மிர்பூரில் இயங்கி வரும் வி.பி.எஸ். என்ற தனியார் பள்ளியின் விடுதியில் தங்கியிருந்த 4 மாணவர்கள் திடீரென காணாமல் போய்விட்டனர்.
பின்னர் காணாமல் போன 4 மாணவர்களில் 2 பேர் திரும்பி வந்துள்ளனர். ஆனால் மற்ற இருவரையும் காணவில்லை.
இந்நிலையில், காணாமல் போன ரிக்குமார், சாகர் குமார் ஆகிய இரு மாணவர்களின் சடலம் பள்ளியின் அருகே இருந்த நீர் நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆசிரியர்கள் அடித்ததால்தான் மாணவர்கள் இறந்ததாக கூறிய அந்த கிராம மக்கள், பள்ளிக்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை அடித்து, நொறுக்கி தீ வைத்தனர்.
மேலும், அங்கிருந்த பள்ளி முதல்வர் தேவேந்திர பிசாத் சிங்கையும் வெளியே இழுத்து வந்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் மீதும், கிராம மக்கள் நடத்திய தாக்குதலில் 6 பொலிசார் காயமடைந்துள்ளனர்.
மேலும், காவல்துறையினர் தடியடி நடத்தி கிராம மக்களை கலைத்த பொலிசார் காயமடைந்த பள்ளி முதல்வரை சிகிச்சைக்காக பாட்னாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
-http://www.newindianews.com
காட்டுமிராண்டிகளின் தேசம் … நீதிபதியே மாகா திருடன் .
தமிழ் நாட்டில் இடையர்கள் தமிழர்களாகவே வாழ்ந்து வந்தார்கள் ..கோனார் என்றும் அழைப்பார்கள் ..இப்போ அவர்களை தமிழரிலிருந்து திராவிடம் பிரித்து யாதவர் ஆண்டபரம்பரை என்றுகிட்டு அவகளும் அண்மைகாலமாக வடநாட்டானோட உறவுகொண்டாடுராபில … இந்தி மொழிகற்றால் தலைமை ஆசிரியரை அடித்தே கொல்லலாம்..அனைவரையும் இந்தியையும் தேவ பாசையான சமசுகிரதத்தையும் கற்க பாரதமாதா அன்போடு அழைக்கிறாள். பாரத் மாதகி ஜே ! திராவிட மாதாகி ஜே /