இந்தியாவை அச்சுறுத்தும் எண்ணம் இல்லையாம்; சீனா விளக்கம்

shangaiஷாங்கை:””நீர்மூழ்கிக் கப்பலை வைத்து இந்தியாவை அச்சுறுத்தும் எண்ணம் இல்லை” என சீனா விளக்கம் அளித்துள்ளது.

ஷாங்கை நகருக்கு சில இந்திய பத்திரிகையாளர்களை அந்நாட்டு அரசு அழைத்துள்ளது. சீனாவின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல்களை இந்திய பத்திரிகையாளர்களுக்கு சீன கடற்படையின் காண்பித்தனர். அவர்களிடம் அந்நாட்டு கடற்படை மூத்த தளபதி வெய் சியோ டாங் கூறியதாவது:பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் போன்ற நாட்டு துறைமுகங்களுக்கு எங்கள் (சீனா) நீர்மூழ்கிக் கப்பல் செல்வதால் இந்தியா அச்சப்படத் தேவையில்லை.

தெற்காசியாவில் பெரிய ராணுவ பலசாலியாக தன்னை சீனா நினைத்துக்கொள்ளவில்லை. தற்காப்பை மட்டுமே நாங்கள் கவனத்தில் கொள்கிறோம். 1987 முதல் கடற்படையில் பணிபுரிகிறேன். இதுவரை ஒருமுறை கூட இந்திய பெருங்கடலுக்கு நான் சென்றதில்லை. இந்தியாவைச் சுற்றி வளையம் எதையும் நாங்கள் அமைக்கவில்லை. அது முடியவும் முடியாது.

இந்தியாவுடன் ஒற்றுமையுடன் இருக்கவே நாங்கள் விரும்புகிறோம். கடந்த காலங்களில் நான்கு இந்திய போர்க்கப்பல்கள் சீனாவுக்கு நட்பு முறையில் வந்தன. தொடர்ந்து அதுபோல் வர வேண்டும் என விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

-http://www.dinamalar.com

TAGS: