“நெல்லுக்கு சொந்தம் கொண்டாடும் சீனாவின் முயற்சி முறியடிப்பு

Paddy_fieldநெல் பயிர் தங்கள் நாட்டில்தான் உருவானது என்று கூறி அதற்கு காப்புரிமை பெற்று, சொந்தம் கொண்டாட சீனா மேற்கொண்ட முயற்சியை இந்திய விஞ்ஞானிகள் முறியடித்துள்ளதாக ஆராய்ச்சியாளர் நாகேந்திர குமார் தெரிவித்தார். நெல் பயிர் இந்தியாவில்தான் உருவானது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதுதொடர்பாக, தில்லியை தலைமையிடமாகக் கொண்ட இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின், செடிகளுக்கான உயிரி தொழில்நுட்ப தேசிய ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் தலைமை ஆராய்ச்சியாளர் நாகேந்திர குமார் சிங் கூறுகையில், “”நெல் பயிர் இந்தியாவில் உருவானது என்ற உண்மை எங்களது ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக சர்வதேச அறிவியல் ஆராய்ச்சி தொடர்பான கட்டுரைகளை வெளியிடும் “நேச்சர் சயின்டிஃபிக் ரிபோர்ட்ஸ்’ பத்திரிகையில் ஆதாரங்களுடன் நமது விஞ்ஞானிகள் கட்டுரை எழுதியுள்ளனர்.

இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகளிலும் நெல் பயிர் வளர்க்கப்பட்டது என்ற கருத்து கடந்த 20ஆம் நூற்றாண்டு வரை ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருந்தது.

இதனிடையே, அமெரிக்காவைச் சேர்ந்த அறிவியலுக்கான தேசிய கல்வியகத்தில் 2011ஆம் ஆண்டு சீனா ஒரு ஆராய்ச்சி அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் சீனாவில் நெல் தோன்றியதாக கூறப்பட்டது.

மேலும் சீனாவின் யாங்ட்úஸ பள்ளத்தாக்கில் சுமார் 8,200- 13,500 ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக நெல் பயிரிடப்பட்டது. அதுவே நெல் பயிரின் தோற்றம் என்று அந்த ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய விஞ்ஞானிகள் நெல் பயிர் இந்தியாவில்தான் தோன்றியது என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளனர் என்று நாகேந்திர குமார் சிங் தெரிவித்தார்.

-http://www.dinamani.com

TAGS: