குடும்பக் கட்டுப்பாடு செய்து முஸ்லீம்கள் நாட்டுக்கு உதவவேண்டும்…சிவசேனா அறிவுரை..

uddhav-thackerayமும்பை: குடும்ப கட்டுப்பாட்டின் அவசியத்தை முஸ்லிம் மக்கள் உணர்ந்து நாட்டுக்கு உதவ வேண்டும் என்று சிவசேனாவின் பத்திரிகையான சாம்னா செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டில் தற்போது முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே வருவதாகவும், இது நாட்டின் ஒற்றுமையை பாதிக்கலாம் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து சிவசேனா அதன் கட்சி பத்திரிகையான சாம்னாவில் கூறியிருப்பதாவது…

முஸ்லிம் மக்கள் தொகைக்கு இணையாக இந்து மக்கள்தொகையை பெருக்குவதால் மட்டுமே பிரச்சினை தீர்ந்துவிடாது. அனைத்து மதங்களுக்கும் கட்டாய குடும்ப கட்டுபாட்டை அமல்படுத்த வேண்டும் என்பதை மத்திய அரசிடம் சங் பரிவார் வலியுறுத்த வேண்டும்.

கடந்த 2001 முதல் 2011 வரையில் முஸ்லிம் மக்கள்தொகை 24 % உயர்ந்துள்ளது. 2015 வரையில் இது நிச்சயம் 5 முதல் 10 % க்கு மேலும் உயர்ந்திருக்கும். மக்கள் தொகை தொகை உயர்வால் மொழி, புவியியல், ஏற்றத்தாழ்வு உருவாகும். இதனால் நாட்டின் ஒற்றுமையில் பிளவு ஏற்படும்.

இந்த மண்ணின் சட்டத்துக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும் என்றும் குடும்பகட்டுபாட்டை ஏற்றுக்கொள்வதின் அவசியத்தையும் முஸ்லீம்களுக்கு பிரதமர் மோடி தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.

நள்ளிரவில் வந்து கதவை தட்டினால் கூட உங்கள் பிரச்சினையை தீர்க்க தயாராக இருப்பதாக பிரதமர் முஸ்லீம்களுக்கு உறுதி அளித்துள்ளார். அதேபோல், மூஸ்லீம்களும் நாட்டுக்கு உதவுவது போல் செயல்படுவார்களா? இவ்வாறு சிவசேனாவின் சாம்னா பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.

tamil.oneindia.com

TAGS: