எம்.ஜி.ஆ.ர் மூலம் தி.மு.க.வை உடைத்த இந்திரா காந்தி? கருணாநிதியின் பேட்டியால் பரபரப்பு

karuna_001எம்.ஜி.ஆர். மூலம் தி.மு.க.வை இந்திரா காந்தி உடைத்ததாக தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைமுகமாக பேட்டி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், மாநில சுயாட்சி விவகாரம், மொழி விவகாரம், ஒடுக்கப்பட்ட மக்கள் நலன்களில் காட்டிய தொடர் அக்கறை, சர்வ வல்லமை படைத்த மத்திய அரசை எதிர்த்துத் துணிச்சலாக அறைகூவல் விடுக்கும் அணுகுமுறை, இதனால் தொடர்ந்து தி.மு.க குறிவைக்கப்பட்டது.

மேலும், திமுக ஒரு தேச விரோத சக்தி என்கிற அளவுக்கு கருத்துகளை விதைப்பதிலும், அவற்றை வளர்ப்பதிலும் தொடக்கக் கால எதிரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்கள். அக்காலகட்டத்தில் அவர்கள் மெல்ல மெல்ல அதில் வெற்றியும் கண்டு வந்தார்கள்.

அதுமட்டுமல்லாது அண்ணாவின் மறைவுக்குப் பின், தி.மு.க ஓய்ந்து விடும் என்று பலர் மனக்கணக்கு போட்டார்கள். தி.மு.க.வோ மேலும் வலுப்பெற்று வளர்ச்சி அடைந்தது.

இந்த நிலையில் தான் இந்திராவின் மனதில் சிலர் ஊன்றிய விஷ விதை தொடர்ந்து வளர்ந்த வண்ணம் இருந்தது. அப்போது தான் தி.மு.க.விலிருந்து நண்பர் எம்.ஜி.ஆர் பிரிந்தார்.

இதைத் தொடர்ந்து தி.மு.க.வை ஒதுக்கவும், ஓரங்கட்டவும், பலவீனப்படுத்தவும் என்னென்ன வேண்டுமோ எல்லாவற்றையும் இந்திரா காந்தி பயன்படுத்திக் கொண்டார். அதில் ஒன்று தான் எம்.ஜி.ஆர் பிரிந்து சென்றதும்.

அவர் தானகவே பிரிந்து சென்று தனிக் கட்சி தொடங்கினாரா அல்லது பிரிக்கப்பட்டு ஊக்குவிப்பும் உற்சாகமும் கொடுக்கப்பட்டாரா என்பதற்கு இன்று வரை உறுதியான ஒரு பதில் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

-http://www.newindianews.com

TAGS: