மது என்னும் கொடிய பாதையில் பயணிக்கும் தமிழகம்: அதிர்ச்சி தகவல்கள் (வீடியோ இணைப்பு)

child_drinks_001சில தினங்களுக்கு முன் திருவண்ணாமலை பகுதியில் சில குடிகார மிருகங்கள் 4 அல்லது 5 வயதே ஆன சிறுவனுக்கு மதுவை கட்டாயப்படுத்தி அருந்த செய்தனர்.

அது மட்டுமின்றி அதை பதிவு செய்து இணையத்திலும் பதிவேற்றம் செய்தனர் அந்த நாசக்காரர்கள். இது ஒரு பெரிய அதிர்வலையை எற்படுத்தியது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், மீண்டும் மற்றொரு சிறுவனை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்த காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்பில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில் பேசும் நபர்கள் அனைவரும் மதுரை தமிழில் பேசுகின்றனர். இந்த வீடியோ காட்சியை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள், அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை தொடர்ந்து 07/07/2015 அன்று கோவையில் 7ஆம் வகுப்பு பள்ளி மாணவி, தனக்கு காதல் தோல்வி ஏற்பட்டதாக கூறி தன் தோழிகளுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டார்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து 1 மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டது. இது போன்ற செய்திகள் அடிக்கடி வருவதை காணமுடிகிறது! இதற்கு முக்கியமான காரணம் மது என்கிற விஷம் தான்!

திருவண்ணாமலை பகுதியில் நடந்த அந்த இழிவை ஒரு பிரபல தொலைகாட்சி ஒன்றில் விவாதித்தனர். ஆளும் கட்சியை சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகர் பொருப்பில்லாமல் பதில் அளித்தார்.

இது பலரின் கண்டனத்திற்கு ஆளானது. ஒரு பொருப்பான இடத்தில் இருந்து கொண்டு கோடிக்கணக்கானோர் பார்க்கும் ஒரு ஊடகத்தின் வாயிலாக இப்படி பொருப்பில்லாமல் பேசுவது ஒரு வெட்கம் கெட்டதனமான செயல்!

உணவு தரவேண்டிய தாயே விஷம் கொடுத்தால் எப்படியிருக்கும்? இது தான் இன்று தமிழகத்தில் நடந்துகொண்டு இருக்கிறது. ஒரு காலத்தில் தீய செயல்கள் பட்டியலில் இருந்த குடிப்பழக்கம் இன்று ஒரு சர்வசாதரண விஷயமாகவும், மது அருந்தாவிட்டால் அது ஒரு குறையாக பாவிக்கப்படுகிறது.

தெருவிற்கு ஒரு மருந்து கடை உள்ளதோ இல்லையோ அரசு அனுமதி பெற்ற நான்கு ஐந்து மதுபான கடைகள் பார்க்க முடிகிறது. இன்னும் சொல்லப்போனால் Tasmacல் வருமானத்தை வைத்து தான் இங்கு அரசு இயந்திரமே செயல்படுகிறது

நினைத்த நொடியில் அனைத்தும் கிடைக்க வைக்கும் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியும், குடியை பெரிதுபடுத்தி காண்பிக்கும் இன்றய சினிமாக்களும், ’குடி’ மக்களை நம்பி ஆட்சி நடத்தும் கட்சிகள் இருக்கும் வரை இப்பிரச்சனை தீருமா என்பது கேள்விக்குறிதான்.

-http://www.newindianews.com

TAGS: