தூக்கு தண்டனையை அறவே ஒழிக்க வேண்டும்.. மத்திய அரசுக்கு அப்துல் கலாம் பரிந்துரை..

abdul kalamடெல்லி : தூக்கு தண்டனையை இந்தியாவில் அறவே ஒழிக்க வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சட்ட ஆணையத்துக்கு அவர் அளித்துள்ள பரிந்துரையில், சமூக, பொருளாதார அடிப்படையில், இந்தியாவில் கொடிய குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனையான தூக்கு தண்டனை முறையை ஒழிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தாம் குடியரசுத் தலைவராக பதவி வகித்த போது, தூக்கு தண்டனை குறித்து முடிவு எடுப்பதில் சிரமம் ஏற்பட்டதாகவும், அந்த தண்டனையை உறுதி செய்வதில் மிகுந்த வலியை தாம் உணர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தூக்கு தண்டனைணை ஒழிப்பது குறித்த ஒரு நாள் ஆலோசனைக் கூட்டத்திற்கு சட்ட ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி இக்கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. தூக்கு தண்டனையை ஒழிப்பது குறித்த விளக்க அறிக்கையை பெற்றுள்ள அப்துல் கலாம் அந்த தண்டனைக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். எனினும் வெகு சில உறுப்பினர்கள் மட்டுமே தூக்கு தண்டனைக்கு எதிராக சட்ட ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளனர். 400 க்கும் மேற்பட்ட கருத்துக்கள் தூக்கு தண்டனைக்கு ஆதரவாகவே பதிவாகியுள்ளன. இதன் இறுதி அறிக்கை அடுத்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

tamil.oneindia.com

TAGS: