பொருளாதார வளர்ச்சியில் சீனாவை பிடரியில் அடித்து இந்தியா முன்னேறும்.. 2016-ல்..- ஐ.எம்.எஃப். தகவல்..

india_china_002வாஷிங்டன்: 2016-ம் ஆண்டு பொருளார வளர்ச்சியில் இந்தியா சீனாவை முந்திவிடும் என்று சர்வதேச நிதியமான ஐ.எம்.எப். விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டில் சீனா 6.03 சதவீதமாக இருக்கும் போது இந்தியாவின் பொருளாதார வளரச்சி 7.05 சதவீமாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து 2-வது ஆண்டாக உலக அளவில் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் முதன்மையான நாடாக இந்தியா உள்ளது. நடப்பாண்டில் உலக பொருளாதார வளர்ச்சி குறைவாகவே இருக்கும் (3.3%) என கணிக்கப் பட்டிருந்தாலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 7.5 சதவீதமாக இருக்கும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது சீனாவின் பொருளாதார வளர்ச்சியை (6.8%) விட அதிகமாகும். கடந்த 2014-ல் வேகமாக முன்னேறி வரும் நாடாக சீனா இருந்தது. ஆனால், நடப்பு ஆண்டிலும், அடுத்த ஆண்டிலும் சீனாவின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை சர்வதேச நிதியம் குறைத்தே மதிப்பிட்டுள்ளது.

எனினும், மத்திய நிதி அமைச்சகம், மத்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள பொருளாதார வளர்ச்சி இலக்குகளைவிட குறைவான இலக்கையே சர்வதேச நிதியம் கணித்துள்ளது.

tamil.oneindia.com

TAGS: