டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடைப்பெற்ற ஊழல் வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை இன்று தொடங்கியது.கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் நடைப்பெற்றதாகக் கூறப்பட்ட 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறையில்,மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக மத்தியக் கணக்குத் தணிக்கைத் துறை தெரிவித்திருந்தது. இதையடுத்து அப்போதைய தகவல் தொடர்புத் துறை மத்திய அமைச்சராக இருந்த ஆ,ராசா மற்றும் இவ்வழக்கில் தொடர்புடைய கனிமொழி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இவ்வழக்கை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், இறுதிக்கட்ட விசாரணையை கோடைக்கால விடுமுறைக்குப் பின்னர் துவங்கலாம் என்று கோரிக்கை வைக்கப்பட்ட து.எனவே, வழக்கின் இறுதிக் கட்ட விசாரணையை கோடை விடுமுறைக்குப் பின்னர் ஜூலை 13ம் திகதி துவங்கலாம் என்று நீதிபதி ஷைனி உத்தரவிட்டார். இதையடுத்து இன்று இவ்வழக்கின் இறுதிக்கட்ட விசாரணைத் தொடங்கி உள்ளது.வழக்கு இறுதிக்கட்ட விசாரணையை எட்டியுள்ளதால், இவழக்கில் தொடர்புடைய ஆ.ராசா, கனிமொழி எம்.பி மற்றும் 17 பேர் நேரில் ஆஜராகி உள்ளனர்.
-http://www.4tamilmedia.com
அம்மணி களி சாப்பிட தயாராக இருங்க.