டாஸ்மாக் கடையை சூறையாடிய நாம் தமிழர் கட்சியினர்: பல லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் சேதம்

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே சிந்தாமணியில் நாம் தமிழகர் கட்சியினர் டாஸ்மாக் கடையை மூடக் கோரி போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு உள்ள டாஸ்மாக் கடையை நாம் தமிழர் கட்சியினர் சூறையாடினர். இதில் பல லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் அடித்து நொறுங்ககப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டாஸ்மார்க் எண் 10296 கடையின் பொறுப்பாளர் பிரகாஷ் உள்ளி்ட்டவர்களை வெளியே அனுப்பிவிட்டவர்கள், கடைக்கு வெளியே உள்ள நாகநாதர் டீக்கடையில் எல்லோருக்கும் ஸ்வீட் கொடுத்துவிட்டு டாஸ்மார்க் கடையில் உள்ளே நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டனர். ஷோக்கேஸ்சில் பாட்டில்களை அடித்து நொருக்கினார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக கோட்டை போலீஸார் 6 பேரை கைது செய்துள்ளனர். முனியப்பன் (வயது 23), கோபி (23), பீரேம் ஆன்ந்த (23), சரவணன் (26), விஜய் (23), சிவா (22). நாம் தமிழர் கட்சியின் தலைமைக்கு தெரிவிக்காமல் இவர்கள் இந்த செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

-http://www.pathivu.com

TAGS: