இந்தியாவிலேயே மிக மோசமான மாசடைந்த நகரமாக சென்னை உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், உலக அளவிலும் மாசடைந்த நகரங்களின் பட்டியலிலும் சென்னை இடம்பெற்றுள்ளது.
நாட்டில் உள்ள முக்கியமான 10 மாசுபாட்டு கண்காணிப்பு நிலையங்களில் அளிக்கப்பட்ட ஆய்வில், டெல்லியை விட சென்னை, கான்பூர் நகரங்களில் தான் காற்றின் தரம் மிக மோசமாக இருந்து வருவது தெரிய வந்துள்ளது.
உயிர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் நச்சு பொருட்கள் காற்றில் இருக்கும் அளவைக் கொண்டு இந்த புள்ளிவிபர அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. சென்னை, லக்னோ, நாக்பூர் ஆகிய நகரங்களில் நச்சு பொருட்களின் அளவு அதிகம் உள்ளதால் இந்த நகரங்களில் வசிக்கும் மக்கள் நுரையீரல் மற்றும் இதய நோய்கள் அதிகம் இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. காற்று மாசுபாடு அதிகம் நிறைந்த நகரங்களில் முதல் இடத்தில் சென்னையும், 2வது இடத்தில் லக்னோவும், 3வது இடத்தில் டில்லியும், 4வது இடத்தில் மேற்கு லக்னோவும், 5வது இடத்தில் கான்பூரும் உள்ளன.
வடசென்னையில் தொழிற்சாலைகளால் மாசு ஏற்படுகிறது. கட்டுமான பணிகளால் போக்குவரத்து நெரிசலால் தென் சென்னை உள்பட மொத்த சென்னை நகரும் மாசடைந்து வருவதாக செய்தி வெளியாகி உள்ளது. ஒவ்வொரு நாளும் 700 புதிய வாகனங்கள் சென்னை சாலையில் ஓடுகின்றன. இதனால் தலைநகர் டெல்லியை விட மாசடைந்த நகரமாக சென்னை உருவாகி உள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் வெளியிடப்படும் புகையில் கலந்துள்ள கார்பன் மோனாக்சைடு மற்றும் சல்பைடு ஆக்சைடால் மாநகரின் காற்று மாசடைந்து மக்களுக்கு ஆரோக்கிய கேட்டை ஏற்படுத்துகிறது.
-http://www.nakkheeran.in
இவனுங்க நிலைமை இந்த நாட்டிலும் இவனுங்க சுத்தமில்லை அந்த நாட்டில் இருப்பனுங்க்களா ஒரு decency இல்லாதவன் தான் தமிழ் நாட்டு தமிழன்