கூடங்குளம் அணுமின் நிலையம் 2வது பிரிவில் 6 மாதங்களில் உற்பத்தி

koodangkulamமாஸ்கோ :”கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரண்டாவது பிரிவில், அடுத்த 6 – 8 மாதங்களில் மின் உற்பத்தி துவங்கும்,” என, ரஷ்யாவிற்கான இந்திய துாதர் பி.எஸ்.ராகவன் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புஇது குறித்து அவர் மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் இரண்டாவது பிரிவில், மின் உற்பத்தி துவங்குவது சிறிது தாமதமாகியுள்ளது. 2011ல் புகுஷிமா அணு உலை விபத்திற்குப் பின், அணு உலை சார்ந்த பாதுகாப்பு விதிமுறைகளை, அணுசக்தி ஒழுங்குமுறை வாரியமான – ஏ.இ.ஆர்.பி., கடுமையாக்கியுள்ளது. அதனால், அதிகளவு சோதனைகள், ஓய்வு நாட்கள் மற்றும் நீண்ட காலத்திற்கு சோதனை ஓட்டங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இந்திய சாதனங்களுடன் பொருந்துவதற்கு ஏற்ப, ரஷ்ய சாதனங்களை தயாரிக்க வேண்டியதன் காரணமாகவும், மின் உற்பத்தி தாமதமானது. ஆனால், தொழில்நுட்பம் சார்ந்த உற்பத்தி, ஏற்கனவே துவங்கியுள்ளது. முழு மின் உற்பத்தி, 6 – 8 மாதங்களில் துவங்கும்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில், மூன்று முதல், ஆறு மின் உற்பத்தி பிரிவுகளை அமைப்பது குறித்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. அடுத்த, 20 ஆண்டுகளில், இந்தியாவில், ரஷ்யாவின் துணையுடன், 12 அணுமின் நிலையங்கள் அமைக்கப்படும். மேற்கு வங்கம், ஹரிபூரில் அமைக்க இருந்த அணுமின் நிலையம், உள்ளுர் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.

ஆதரவு அதற்கு பதிலாக, கர்நாடகா அல்லது ஆந்திராவில், ஒரு அணுமின் நிலையம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இரு மாநில அரசுகளும், இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

-http://www.dinamalar.com

TAGS: