மத்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகம் கட்டுப்பாட்டில் தேசிய குற்ற ஆவண காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதன் டைரக்டர் ஜெனரலாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் பணியாற்றி வருகிறார்.
இந்த ஆவண காப்பகத்தின் சார்பில் இந்தியாவில் ஏற்பட்ட விபத்து இறப்புகள் மற்றும் தற்கொலை தொடர்பான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு அறிக்கையின்படி, கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவில் பல்வேறு விபத்துகளின் காரணமாக ஒரு மணி நேரத்துக்கு 52 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விபத்துகளிலான இறப்புகள் என்பதற்கான காரணங்களில் சாலை விபத்துகள், நீரில் மூழ்கி இறத்தல், மின்னல் தாக்கி இறத்தல், தீ விபத்துகள், கீழே விழுந்து இறத்தல், தற்கொலை போன்றவை அடங்குகிறது.
கடந்த ஆண்டு (2014) மட்டும் இந்தியாவில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 666 பேர் தற்கொலை செய்து இருக்கிறார்கள். தற்கொலை செய்து கொண்டவர்களில் 89 ஆயிரத்து 129 பேர் ஆண்கள். 42 ஆயிரத்து 521 பேர் பெண்கள். இதர 16 பேர் திருநங்கைகள் ஆவர். தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த பெண்களில் 20 ஆயிரத்து 148 பேர் இல்லத்தரசிகள் ஆவார்கள்.
இந்தியாவிலேயே தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் மராட்டிய மாநிலம் உள்ளது. அங்கு கடந்த ஓராண்டில் மட்டும் 16 ஆயிரத்து 307 பேர் தற்கொலை செய்துள்ளார்கள்.
அதற்கு அடுத்தபடியாக 16 ஆயிரத்து 122 எண்ணிக்கையுடன் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையை மொத்த எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 12.2 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது.
இந்தியாவிலேயே நகரங்களில் அதிகமாக தற்கொலை செய்து கொண்டவர்களின் பட்டியலை வைத்து பார்க்கும் போது, சென்னை நகர் தான் முதல் இடத்தில் உள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் (2014) சென்னையில் 2 ஆயிரத்து 214 பேர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார் கள்.
இந்தியாவிலேயே அதிகளவு எண்ணிக்கையிலான விபத்துகள் நடைபெற்றுள்ள மாநிலங்களின் அடிப்படையில் முதல் இடத்தில் தமிழ்நாடு உள்ளது என்று பட்டியலில் இருந்து தெரியவருகிறது.
29 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களில் எடுத்த கணக்கின் அடிப்படையில், மொத்தம் 4 லட்சத்து 81 ஆயிரத்து 805 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 107 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 69 ஆயிரத்து 95 விபத்துகள் (கடந்த ஓராண்டில் மட்டும்) ஏற்பட்டுள்ளன. இந்த விபத்துகளில் 77 ஆயிரத்து 756 பேர் காயமடைந்துள்ளனர்.
-http://www.nakkheeran.in
எலும்புதுண்டுக்கு காலுக்கு இடையே வாலாட்டுது மனித நாயி .