ஒரு லட்சத்து 31, 666 தற்கொலைகள் ; 5 ஆயிரத்து 650 பேர் விவசாயிகள்

farmerபுதுடில்லி: கடந்த 2014 ல் 5,ஆயிரத்து 650 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இதில் மகாராஷ்ட்டிராவில் மட்டும் 2 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். வறுமை காரணமாக தங்களின் உயிரை மாய்த்து கொண்டதாக அறியப்பட்டுள்ளது. 2014 ல் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 666 பேர் தற்கொலை செய்துள்ளனர்.விபத்து மற்றும் தற்கொலை தொடர்பான விவரம் சேகரிக்கும் நேஷனல் கிரைம் ரிக்கார்ட்ஸ் பீரோ இந்த விவர அறிக்கையை வெளியிட்டது. இதன்படி தற்கொலை செய்து கொண்ட மொத்தம் 5 ஆயிரத்து 650 விவசாயிகளில் 5 ஆயிரத்து 178 பேர் ஆண்கள் ,472 பேர் பெண்கள் ஆவர்.

அதிகப்பட்சமாக மகாராஷ்ட்டிராவில் 2 ஆயிரத்து 568 பேர் இறந்துள்ளனர். இது மொத்த இறப்பில் (45. 5 %) ஆகும். ஆந்திராவில் இருந்து பிரிந்துள்ள தெலுங்கானாவில் 898 பேர் இறப்பு (15. 9 %) மத்தியபிரதேசம் 826 (14.6 %) .
இறந்த விவசாயிகள், விவசாயத்தில் பெரும் நஷ்டம் மற்றும் வங்கி கடனை அடைக்க முடியாத நிலை, குடும்ப பிரச்னைகள் காரணமாக தங்களின் உயிரை மாய்த்துள்ளனர். இந்த விவசாயிகள் 30 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் 65 % ஆக இருந்துள்ளனர்.

இது தவிர பொதுவான தற்கொலைகள் குறித்த விவரத்தில் கடந்த 2014 ல் ஒரு மணி நேரத்திற்கு 15 பேர் தற்கொலை மூலம் தங்களின் வாழ்வை முடித்துள்ளனர். ஆனாலும் ஒரு மன நிம்மதி. கடந்த 2103 விட 2014 ல் தற்கொலைகள் குறைந்துள்ளதாம். அதாவது 2103 ல் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 799 பேர் தற்கொலை செய்துள்ளனர். 2014 ல் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 666 மட்டுமே இது கடந்த ஆண்டை விட சற்று குறைவு தான்.
தமிழகத்தில் எத்தனை பேர் ? அதிக தற்கொலை நடந்த மாநிலத்தில் மீண்டும் மகாராஷ்ட்டிராவே முதலிடம் ( 16 ஆயிரத்து 307 ) , தமிழ்நாட்டில் ( 16 ஆயிரத்து 122 ) , மேற்கு வங்கம் ( 14 ஆயிரத்து 310 ) , மத்திய பிரதேசம் போபாலில் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்ததாகவும், கான்பூரில் தற்கொலை செய்வோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்ததாகவும் இந்த அறிக்கையின் மற்றொரு பகுதியில் சொல்லப்பட்டுள்ளது.

மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை மற்றும் நிவாரணம் வழங்குவதும், முறையான மனநல நிபுணர்கள் அரசு தரப்பில் நியமனம் செய்வதும் அவசியம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

-http://www.dinamalar.com

TAGS: