வைகோவுடன் மோடி திடீர் சந்திப்பு! – மஹிந்த ராஜபக்சே பற்றி அலசியது என்ன?

modi_yho_mahindaவைகோவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இன்று பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துள்ளனர்.

நண்பகல் பன்னிரண்டு மணிக்கு வைகோவை சந்திப்பதாக நரேந்திரமோடி தெரிவித்திருந்தும், 11.45 க்கு வைகோ அங்கே சென்று விட்டார். ஆனாலும் பிரதமர் நரேந்திர மோடி 12 மணிக்குத்தான்  வைகோவை அழைத்தார்.

உள்ளே நுழைந்தவுடன், நரேந்திர மோடி வைகோவைக் கட்டித் தழுவிக்கொண்டு, நீங்கள் என்னைச் சந்திக்க வந்தததில் மிக்க மகிழ்ச்சி என்றார்.

நான் தினமும் உங்களை விமர்சித்து வருகிறேன். ஆனாலும் நீங்கள் என் நண்பர். சந்திக்க நேரம் கேட்டவுடனே உடனே வாய்ப்பு அளித்ததற்கு மிக்க நன்றி என்றார் வைகோ.

நீங்கள் ஒரு உணர்ச்சியாளர். அதனால்தான் ஈழப் பிரச்சினையை அப்படி அணுகுகிறீர்கள் என்றார் நரேந்திர மோடி.

நான் யாழ்ப்பாணத்திற்குச் சென்று வந்தேன். ராஜபக்சே விசயத்தில் எப்படி நடந்துகொண்டோம் என்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா? என்றார் மோடி.

நன்றாகத் தெரியும் என்றதோடு வைகோ முடித்துக்கொண்டார் என ஊடகங்களுக்கு வைகோ தெரிவித்திருக்கின்றார்.

மஹிந்த ராஜபக்சே பற்றி மேலும் மோடியும் வைகோவும் ஏதாவது  கலந்தாலோசித்தார்களா என்பது தொடர்பில் விபரங்கள் எதுவும் வெளிவரவில்லை.

தொடர்ந்து இருவரும் பேசுகையில்,

இலங்கையில்தான் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றால், இந்தியாவில் அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் சேசாசலம் வனப்பகுதியில் தமிழ்நாட்டைச் சேர்நத் 20 கூலித் தொழிலாளர்களான தமிழர்கள், ஆந்திர அரசின் வனத்துறையாலும், சிறப்புக் காவல்படையினராலும் மிகக் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர்.

உண்மையை மறைக்க போலீசுடன் மோதல் என்று கட்டுக்கதையை அவிழ்த்து விட்டனர். சம்பவத்தில் மூன்று சாட்சிகள் நடந்ததைச் சொன்னதன்பேரில், 20 தமிழர்கள் படுகொலை குறித்த உண்மை வெளிவர, மத்திய அரசின் சிபிஐ விசாரணை வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரை செய்தது.ஆனால், இந்தப் படுகொலைகளை மூடி மறைக்கத் தீவிரமாக ஈடுபட்டுள்ள சந்திரபாபு நாயுடுவின் ஆந்திர அரசு, மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரைக்கு எதிராக, ஆந்திர உயர்நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்று உள்ளது.

சொந்த நாட்டிலேயே தமிழர்கள் இப்படிப் படுகொலை செய்யப்படுவது எங்கள் இதயத்தில் நெருப்பை அள்ளிக் கொட்டுகிறது. நீதி கிடைக்க நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்� என வைகோ கூறினார்.

உடனே  �இந்தக் கொலைக் குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயமாகத் தண்டிக்கப்பட வேண்டும்� என்று பிரதமர் மோடி கூறினார்.

 

30 நிமிடங்கள் தொடர்ந்த இருவருடைய இச்சந்திப்பை ஒரு காலத்திலும் மறக்க முடியாதது என வைகோ தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com
TAGS: