திருப்பதி : ஆந்திர வனப்பகுதியில் செம்மரக் கட்டைகளை வெட்டிக் கடத்தியதாக 43 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சேலம், தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்டி கடத்தியதாக 20 தமிழர்களை அம்மாநில போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தை நியாயப்படுத்தும் வகையில், ஆந்திர போலீசார் அவ்வப்போது செம்மரம் வெட்டி கடத்தியதாக பலரை கைதுசெய்து அவர்களை தமிழர்கள் என்று அடையாளப்படுத்தி வருகிறது. இதில் அப்பாவித் தமிழர்களும் சிக்க வைக்கப்படுவதாகவும் புகார் எழுந்து வருகிறது.
இந்நிலையில் செம்மரம் வெட்டி கடத்தியதாக ஆந்திர போலீசார் 43 தமிழர்களை கைது செய்துள்ளனர். திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் வந்த டெம்போ வாகனம் ஒன்றை வழிமறித்து ஆந்திர போலீசார் சோதனை செய்தபோது, அதில் இருந்தவர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு ஆந்திர போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரித்தாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, அந்த கும்பலில் இருந்து சேலத்தைச் சேர்ந்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். மற்றவர்கள் காவலர்களிடம் இருந்து தப்பி ஓடிவிட்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. அந்த கும்பலிடம் இருந்து 22 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மேலும் 42 தமிழர்கள் கைது செய்யப்பட்டதாக ஆந்திர வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக தமிழர்கள் கை சூப்பிகல் .