கால் நூற்றாண்டு காலமாக தொடரும் உயிர்வலி!

nalini_7perஓராண்டுக்குப் பிறகு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் அலசப்படுகிறது, முருகன், சாந்தன் உட்பட ஏழு பேரின் தண்டனைக் குறைப்பு விவகாரம்!

கால் நூற்றாண்டு காலமாக சிறைக்குள் அல்லாடிக்கொண்டு இருக்கும் ஏழு பேரின் வாழ்க்கையில், கடந்த ஆண்டு திடீரென ஒரு நாள் ஒளிவெள்ளம் வந்து, இரண்டே நாட்களுக்குள் மீண்டும் கும்மிருட்டாகிவிட்டது.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர், தமிழகத்தில் மரண தண்டனை ஒழிப்பு இயக்கம் தொடர்ச்சியான போராட்டங் களையும் பிரச்சாரத்தையும் நடத்தியது. அதன் எதிரொலியாக, அரசியல் கட்சிகளும் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு அளித்தன. பெரும்பாலான எதிர்க்கட்சிகள் மரண தண்டனையை அகற்றக் கோரி குரல் கொடுக்க.. அதே சமயம், மரணதண்டனைக் கைதிகளின் கருணைமனுக்கள் நீண்டகாலமாகக் கிடப்பில் போடப்பட்டதால், அந்த தாமதத்தைக் காரணம் கூறி, 11 மரண தண்டனைக் கைதி களுக்கு ஆயுள்தண்டனை யாகக் குறைத்து, உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்தது.

அதையடுத்து, ராஜீவ் கொலை வழக்கில் 24 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்துவரும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனையும் ஆயுள் தண்டனையாகக் குறைக் கப்பட்டது. 2014 பிப்ரவரி 18-ல் அப்போதைய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், சிவகீர்த்திசிங் ஆகியோர் அடங்கிய அமர்வே, இந்த தீர்ப்பை அளித்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை எதிர்த்து, சட்டமன்றத்திலும் முருகன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய எதிர்க்கட்சி கள் வலியுறுத்தின. ராஜீவ் மரணவழக்கை விசாரித்தது, மத்திய புலனாய்வுக் குழு- (சி.பி.ஐ.) என்பதால், ஏழு ஆயுள் கைதிகளையும் விடு விக்க, மத்திய அரசுடன் ஆலோசனை செய்த பின்னர், அவர்களை மாநில அரசு விடுதலை செய்யவேண்டும். விடுதலைக் கோரிக்கை வலுவானதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு பிப்ரவரி 20 அன்று முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, சட்டப் பேரவையில், மத்திய அரசின் பதிலுக்காகக் காத்திருக்காமல் ஏழு பேரையும் விடுதலை செய்ய அமைச்சரவை முடி வெடுத்துள்ளது என அறிவித்தார்.

அதைக்கேட்டு மகிழ்ச்சி அடைந்தவர்களை விரைவிலேயே அதிர்ச்சியும் தாக்கியது. ஜெ. அரசு விதித்த கெடுவை ஏற்காத மத்திய அரசு, ஏழு பேரையும் விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்தது. உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் விடுவிப்பு முடிவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. மத்திய புலனாய்வு அமைப்பு விசாரித்த (ராஜீவ் கொலை) வழக்குகளிலும் மத்திய அரசு கையாண்ட வழக்குகளிலும் கைதிகளை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல் லையா? ஆயுள் தண்டனை என்பதன் பொருள் என்ன? -கேள்விகளை எழுப்பிய உச்ச நீதிமன்றம், அதைத் தெளிவு படுத்த அரசியல்சாசன அமர்வு விசாரிக்கவும் உத்தரவிட்டது.

23 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக, சிறையிலிருந்து சிகிச்சைக்காக வெளியில் வந்த பேரறிவாளன்.

ராஜீவ் வழக்கில் சிறையில் இருக்கும் ஏழு பேருக்கும் இந்த உத்தரவு பொருந்தாது என்று அரசியல் சாசன அமர்வு அறிவித்ததன் மூலம், அவர்களின் விடுதலையில் மர்மம் நீடிக்கிறது. அவர்களின் உயிர் வலி தொடர் கிறது.

-http://www.tamilwin.com

TAGS: