மதுக்கடைகளை இழுத்து மூடு ; வைகோ போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு

ykoதிருநெல்வேலி: தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்தும் போராட்டம் வலுத்துள்ளது. கலிங்கப்பட்டியில் உள்ள கடையை மூடும் வரை போராட்டம் தொடரும் என ம.தி.மு.க., பொது செயலர் வைகோ போராட்டத்தை துவக்கியுள்ளார்.

இங்கு நடத்திய போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. டாஸ் மாக் கடையை சூறையாடிய போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடியும், கண்ணீர் புகையும் வீசி விரட்டினர்.கூட்டத்தினரை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
குமரி மாவட்டத்தில் தியாகி சசிபெருமாள் டவரில் ஏறி போராட்டம் நடத்தியபோது உயிரிழந்தார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடும் போராட்டத்தை அரசியல் கட்சிகள் கையிலெடுத்துள்ளன.

கண்ணீர் புகை வீச்சு: துப்பாக்கிச்சூடு : காலையில் சூளைமேட்டில் ஒரு டாஸ்மாக் கடை சூறையாடப்பட்டது. இன்று மதியம் நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் அங்குள்ள மதுக்கடையை மூடும் வரை போராட்டம் நடத்த வந்தார். இவரது ஆதரவாளர்களுடன் கலிங்கபட்டியில் கூடினார்.

இதில் ஒருவர் செல்போன் டவர் மீது ஏறினார். இவரை பார்க்க அருகே சென்றபோது போலீசாருக்கும் , தொண்டர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசாருடன் மோதல் ஏற்பட்டது. டாஸ்மாக் கடை சூறையாடப்பட்டது. தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி , கண்ணீர் புகையும் வீசினர் . இதனால் இங்கு பதட்டம் நிலவுகிறது.

சொந்த ஊரில் சாவதே மேல்: வைகோ : போராட்டத்தின் இடையே அமைதி ஏற்பட்டதும் வைகோ பேசுகையில், நாங்கள் நியாயமான போராட்டம் நடத்தினோம். டாஸ்மாக் கடை முன்பு போராட்டம் நடத்துவோம் என நாங்கள் அறவித்தும், ஜெ., உத்தரவுப்படி மதுக்கடை போலீசார் பாதுகாப்புடன் திறக்கப்பட்டது. மதுக்கடைகள் அருகே சென்ற போது போலீசார் எங்கள் மீதும் என் மீதும் கண்ணீர் புகை வீசினர். சரியான போலீசாக காக்கிச்சட்டை போட்டிருந்தால் இப்போது என் மீது சுடு. தனியாக வருகிறேன். என்னை கைது செய்ய தயாரா ? இவ்வாறு வைகோ பேசினார்.

விஜயகாந்த் போராட்டம்: சேலம் இளம் பிள்ளை பகுதியில் விஜயகாந்த் சசிபெருமாள் வீட்டுக்கு சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் இங்குள்ள பகுதியில் விஜயகாந்த் மவுன ஊர்வலம் நடத்தினார். வைகோ போராட்டத்தில் திருமாவளவனும் பங்கேற்றார்.

-http://www.dinamalar.com

TAGS: