இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவதன் காரணமாக தமிழக மீனவர்களில் பெரும்பாலானோர் கேரளா கடற்பகுதிக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிரந்தரமான வருவாயை எதிர்ப்பார்த்தே தமிழக மீனவர்கள் கேரள கடற்பகுதிக்கு சென்றுள்ளதாக தமிழக மீனவர் சம்மேளன தலைவர் என் ஜே போஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மீன்பிடிக்காக 667 படகுகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட போதும் 61 படகுகளே தொழிலுக்காக சென்றதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கச்சத்தீவு உடன்படிக்கையின்படி இரண்டு நாட்டு மீனவர்களும் அதனை அண்டிய கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதியுண்டு என்பதை மீனவர் சம்மேளன தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
-http://www.newindianews.com
தமிழ் நாட்டு அரசும் இந்திய அரசும் கையால் ஆகாத ஜென்மங்கள். கட்ச தீவை இந்திரா காந்தி இலங்கைக்கு தாரை வார்த்து தமிழ் நாட்டு மீனவர்களுக்கு அநீதி இழைத்து அவர்களின் வாழ்வாதாரதிர்க்கு கேடு விளைவித்து விட்டார்- அதை பற்றி அப்போது கேட்க யாருக்கும் அறிவு இல்லை. இன்று இந்த சுண்டைக்காய் பண்ணும் அநியாயத்திற்கு அளவே இல்லை.