சிரியாவில் உள்ள ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பில் சேர்ந்த 13 இந்தியர்களில், 7 பேர் மட்டுமே உயிருடன் உள்ளதாக, புலனாய்வு அமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறந்த, 6 பேரில், 3 பேர், பாகிஸ்தான் சென்று, இந்திய முஜாகிதீன் அமைப்பு மூலம் சிரியா சென்றவர்கள். இருவர் மகாராஷ்டிராவில் இருந்தும், ஒருவர், தெலுங்கானாவில் இருந்தும் சென்று, உயிரை விட்டுள்ளனர். உயிருடன் உள்ளோரில், நான்கு பேர், தெலுங்கானா, பெங்களூரு, ஓமன் மற்றும் சிங்கப்பூரில் இருந்து சென்றவர்கள்.
தவிர, மும்பையின் கல்யாண் பகுதியில் இருந்து இருவரும், காஷ்மீரை பூர்வீகமாக கொண்ட ஒருவர், ஆஸ்திரேலியாவில் இருந்தும் சிரியா சென்றுள்ளனர். அவர்களில், போர்முனையில் உள்ள ஒருவரை தவிர, மற்றவர்கள், வீட்டு வேலைகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதுவரை, இந்தியாவில் இருந்து ஐ.எஸ்., அமைப்பில் சேர முயன்ற, 17 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர், தெலுங்கானாவைச் சேர்ந்தவர்கள். சில தினங்களுக்கு முன், உள்துறை செயலர் எல்.சி.கோயல் தலைமையில், டில்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், 12 மாநிலங்களைச் சேர்ந்த, டி.ஜி.பி.,க்கள், உள்துறை செயலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், பயங்கரவாத அமைப்புகளில் இந்திய இளைஞர்கள் இணைவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
-http://www.sankathi24.com