பாகிஸ்தான் பயங்கரவாதியிடம் புலனாய்வு அமைப்புகள் விசாரணை

kashஸ்ரீநகர்:ஜம்மு – காஷ்மீர் மாநில எல்லையில் பிடிபட்ட, பாக்., பயங்கரவாதியிடம், என்.ஐ.ஏ., புலனாய்வு அமைப்பு, காஷ்மீர் போலீஸ் ஆகியவை, கூட்டாக விசாரணை நடத்தி வருகின்றன.

பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கும்பல், சில வாரங்களுக்கு முன், ஜம்மு – காஷ்மீர் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவியது. பின், இரு குழுக்களாக, அவர்கள் பிரிந்தனர். ஒரு குழு, குர்தாஸ்பூர் மாவட்டத்தில் தாக்குதல் நடத்தியது.

மற்றொரு குழு, கடந்த 3ம் தேதி, உதம்பூரில், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில், இரு வீரர்கள் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளில் ஒருவனான மொமின் கொல்லப்பட்டான். முகமது நவித், 20, என்ற மற்றொரு பயங்கரவாதியை போலீசார் கைது செய்தனர். கடந்த மூன்று நாட்களாக, ஜம்மு – காஷ்மீர் மாநில போலீஸ் வசம் முகமது நவித் உள்ளான்.

அவனிடம், மாநில போலீஸ், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு, புலனாய்வு குழு ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பயங்கரவாதியிடம் விசாரணை நடத்த, மத்திய புலனாய்வு அமைப்புகளுக்கு, மாநில போலீஸ், முழு ஒத்துழைப்பு தருவதாக என்.ஐ.ஏ., இயக்குனர் தெரிவித்தார்.

-http://www.dinamalar.com

TAGS: