அப்துல் கலாமின் தனிச்செயலாளராக இருந்த நபர் ஒருவர், கலாமுடன் பணியாற்றிய அனுபவங்களை புத்தகமாக வெளியிட்டுள்ளார்
கலாமுடன் பணியாற்றிய அனுபவங்களை ‘கலாம் எபெக்ட்’ என்று அவருக்கு தனிச்செயலாளராக இருந்த பி.எம். நாயர் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
அந்த புத்தகத்தில், அப்துல் கலாம் இந்திய குடியரசுத் தலைவராக இருந்த சமயத்தில் அவருக்கு வந்த ஏராளமான பரிசுப் பொருட்களை, கலாம் போட்டோ எடுத்து வைத்துவிட்டு, அதனை ஆவண காப்பகத்துக்கு அனுப்பி விடுவார்.
ஒரு பொருளை கூட அவர் தனக்கு என்று எடுத்து கொண்டது இல்லை.
வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் அன்பளிப்புகளை மறுத்தால், அந்த நாடுகளை அவமானப்படுத்துவது போல் அமைந்து விடும் என்பதால்தான் பரிசு பொருட்களை கலாம் பெறுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
ரமலான் மாதத்தில் குடியரசுத் தலைவர் ‘இப்தார்’ விருந்தளிப்பது வழக்கமான பாரம்பரியமான நிகழ்வு.
கடந்த 2002ம் ஆண்டு கலாம் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற சமயம், என்னை அழைத்து இப்தார் விருந்துக்கு ராஸ்டிரபதி பவனில் எவ்வளவு செலவாகும் என்று கேட்டார்.
நான் 22 லட்ச ரூபாய் செலவழிப்போம் என்றதும், ஏற்கனவே இருக்கப்பட்டவர்களுக்கு இப்தார் விருந்தளிப்பதால் என்ன பயன்?
அந்த 22 லட்சத்தை அனாதை இல்லங்களுக்கு பிரித்து வழங்கி விடலாம் என்று கூறிய அவர், பின்னர் தனியாக என்னை அழைத்து ஒரு லட்ச ரூபாய்க்கும் செக் அளித்து இதையும் சேர்த்து 23 லட்ச ரூபாய்க்கு குழந்தைகளுக்கு உணவு ஏற்பாடு செய்யுங்கள் என கூறினார்.
கலாம் இஸ்லாமியர்தான் என்றாலும் அவர் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்த வரை குடியரசு தலைவர் மாளிகையில் ‘இப்தார்’ விருந்து அளிக்கப்பட்டதில்லை.
கலாம் பொறுப்பேற்ற போது ராமேஸ்வரத்தில் இருந்து அவரது உறவினர்கள் 50 பேர் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்கியிருந்தனர்.
அவர்கள் டெல்லியை சுற்றிபார்க்க அமர்த்தப்பட்ட பேருந்துக்கான கட்டணத்தை அப்துல் கலாம் வழங்கி விட்டார். இவர்களில் யாருக்கும் எந்த சமயத்திலும் அரசுக்கு சொந்தமான கார் பயன்படுத்தப்படவில்லை.
கலாமின் உறவினர்கள் டெல்லியில் தங்கியிருந்த சமயத்தில் அவர்களுக்கு உணவு செலவாக 2 லட்ச ரூபாய் குடியரசுத் தலைவர் மாளிகையில் செலவிடப்பட்டது.
அந்த தொகையை கலாம் தனது கையில் இருந்து செலுத்தி விட்டார். எந்த குடியரசுத் தலைவரும் இது போன்று செலுத்தியதே இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
http://www.newindianews.com
இதுதான் கலாமின் பண்பு . வாழ்க அவரது புகழ் .
மாபெரும் தலைவர் மறைந்தாலும் அவர்தம் மாண்பு மறைவதில்லை.
(அப்துல் கலாம்),ஐயா புகழ் என்றும் நிலைதிருக்கும்.
போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் புகழைக் குறித்தே அமையும்…….
அப்துல் கலாம் ஐயா பெற்ற விருதுகள் 1981 – பத்ம பூஷன் 1990 – பத்ம விபூஷன் 1997 – பாரத ரத்னா 1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது 1998 – வீர் சவர்கார் விருது 2000 – ராமானுஜன் விருது 2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம் 2007 – கிங் சார்லஸ்-II பட்டம் 2008 – பொறியியல் டாக்டர் பட்டம் 2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது 2009 – ஹூவர் மெடல் 2010 – பொறியியல் டாக்டர் பட்டம் 2012 – சட்டங்களின் டாக்டர் 2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது,
மாண்புமிகு கலாம் அவர்கள் இஸ்லாமியராக இருந்தாலும் எல்லா மதங்களையும் மதிக்கும் பண்புடையவர் இவரைப் போன்ற மாமனிதரை காண்பது அரிது !
இங்கேயும் இருக்கிறார்கள் தலைவர்கள் இப்படியா?
Arumai