மத்திய அரசின் மலையாள உயர் அதிகாரிகள் , தமிழக விவசாயிகளுக்கு எதிராக சதி! பழ நெடுமாறன் பகிரங்க குற்றச்சாட்டு!

மத்திய அரசு நிர்வாகத்தில் பணியாற்றும் கேரளத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், சிங்கள அரசுடன் கள்ள உறவு வைத்திருக்கிறார்கள். இவர்கள்தான் ஈழத்தில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்படுவதற்குக் காரணமானவர்கள். இப்போதும் இவர்கள்தான் தமிழகத்திலிருந்து கேரளத்திற்கு காய்கறிகள் வருவதை நிறுத்திவிட்டு, இலங்கையைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் காய்கறிகளை இறக்குமதி செய்ய சதிசெய்கிறார்கள் என்று நான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன் என்றார் நெடுமாறன்.

 

கம்பத்தில், இன்று(13.08.2015), நண்பகல் 12 மணிக்கு தமிழர் உரிமை மீட்புக்குழு ஏற்பாடு செய்த மக்கள் பேரணி ஐயா பழ நெடுமாறன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கம்பத்தில் தொடங்கி, குமுளியை நோக்கி முன்னேறிய பேரணி , இடையில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டது.செய்தியாளர்களைச் சந்தித்த பழ நெடுமாறன் கூறியது..

1.இந்தப் போராட்டம் கேரள மக்களுக்கு எதிரானது அல்ல. தமிழகத்தில் இருந்து வரும் காய்கறிகளில் நச்சுத்தன்மை அதிகம் இருப்பதாகவும், அதனால் அவற்றைத் தரச்சோதனை செய்தே அனுமதிப்போம் என்று அறிவித்துள்ள கேரள அரசினைக் கண்டித்தே இப்போராட்டம்.

2. முல்லைப் பெரியாறு அணைப்பிரச்சினையில், உச்சநீதிமன்றம் அளித்த சரியான தீர்ப்பை சகித்துக்கொள்ளமுடியாத கேரள அரசும், அரசியல்வாதிகளும், தமிழக விவசாயிகளுக்கு கேடு இழைப்பதற்காக இம்முடிவை எடுத்துள்ளனர்.

3.மத்திய அரசு நிர்வாகத்தில் பணியாற்றும் கேரளத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், சிங்கள அரசுடன் கள்ள உறவு வைத்திருக்கிறார்கள். இவர்கள்தான் ஈழத்தில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்படுவதற்குக் காரணமானவர்கள். இப்போதும் இவர்கள்தான் தமிழகத்திலிருந்து கேரளத்திற்கு காய்கறிகள் வருவதை நிறுத்திவிட்டு, இலங்கையைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் காய்கறிகளை இறக்குமதி செய்ய சதிசெய்கிறார்கள் என்று நான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறேன்.

4.இதனால் பாதிக்கப்படும் தமிழக விவசாயிகள் வெகுண்டெழுந்தால்,விளைவுகள் விபரீதமாகக்கூடும் என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும்.

5.பிரதமர் மோடி அவர்கள் தலையிட்டு தமிழக வவசாயிகளுக்கு நீதி வழங்கவேண்டும்.

6. இப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்படவில்லையென்றால் போராட்டம் தீவிரமடையும் என்று எச்சரிக்கிறேன்.

-http://www.pathivu.com

TAGS: