மதுரை : டாஸ்மாக் மதுபானங்களை ரசாயன ஆய்வுக்கு உட்படுத்தக்கோரிய மனுவை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், டாஸ்மாக் கடைகளுக்கு 11 மதுபான உற்பத்தி நிறுவனங்கள் மூலம் வாங்கப்படும் மது தரமற்றது என்றும், இந்நிறுவனங்கள் தயாரிக்கும் மதுபானங்களில் போதைக்காக நச்சுத்தன்மை கொண்ட ரசாயனம் அதிக அளவில் கலக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், தரமற்ற மதுவை தொடர்ந்து குடிப்பதால் மூளை, நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் பாலின உறுப்புகள் பாதிக்கப்படுவதாகவும், அதனால் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.