ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் இந்தியா, பாகிஸ்தான் படையினர் இடையே அடிக்கடி துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதன் காரணமாக இரு நாடுகளுக்கும் பதற்றம் நிலவுவதால், இரு தரப்பும் அமைதி காக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக பான் கீ மூன் சார்பாக அவரது செய்தித் தொடர்பாளர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இந்தியா – பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் அண்மையில் நடைபெற்ற வன்முறைகளில், இரு தரப்பிலும் உயிரிழப்பு நேரிட்டுள்ளது. இதில் பொது மக்களும் அடங்குவர்.
இந்தச் சம்பவத்துக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் தனது கவலையைத் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் அரசுகள் அமைதி காக்க வேண்டும் என்றும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இரு நாடுகளும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் பான் கீ மூன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இரு நாடுகளும் தங்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார். இந்த நோக்கத்தின் அடிப்படையில், இந்தியா – பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் வரும் 23, 24ஆம் தேதிகளில் சந்தித்துப் பேசவிருப்பதையும் அவர் வரவேற்றுள்ளார் என்று அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் வலியுறுத்தல்: இதனிடையே, காஷ்மீர் பிரச்னையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் மீண்டும் வலியுறுத்தியது.
இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஐ.நா.வுக்கான பாகிஸ்தானின் நிரந்தரப் பிரதிநிதி மாலீஹா லோதி பேசியபோது, ஜம்மு-காஷ்மீர் பிரச்னை, மத்திய கிழக்கு மோதல்கள், பாலஸ்தீனம் விவகாரத்துக்கு தீர்வு காண்பதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பும் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
-http://www.dinamani.com
வந்துட்டாரப்பா உலக சமாதன தூதர்.
கொரியநாட்டின் நவீன இயந்திர மனிதன் ..