பாகிஸ்தானில் நடக்கும் தீவிரவாத சம்பவங்களை இந்தியா தூண்டிவிடுகிறது பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நிசார் அலிகான் கூறியுள்ளார்.
அந்நாட்டு பத்திரிக்கைகளுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நமது எதிரிகள் (இந்தியா) எல்லையில் பயங்கரவாதத்தை வளர்த்து வருகின்றனர். நமது நாட்டில் குழப்பம் ஏற்படுத்தவும், இதில் குளிர் காயவும் நினைக்கின்றனர். பாகிஸ்தானில் பயங்கரவாதம் வளர்க்க எதிரிகளுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வழங்கப்படுகிறது. ஒரு கையில் பேச்சு என்றும், மறுகையில் பயங்கரவாத வளர்ச்சியையும் கையாள்கின்றனர். எல்லையில் குடியிருப்பு பகுதியில் அவர்கள்தான் தாக்குதல் நடத்தி வருகின்றனர். எதிரிகளுக்கு வாகா எல்லையில் தான் குறி உள்ளது. பயங்கரவாதிகள், பாகிஸ்தானில் வளர எதிரிகள் மறைமுக உதவி செய்கின்றனர் . நாங்கள் பயங்கரவாதம் ஒழிப்பில் வெற்றி பெறுவோம். இவ்வாறு கூறினார்.
வரும் 23ஆம் தேதி டெல்லியில் இரு நாட்டு தேசிய பாதுகாப்பு செயலர்கள் கூட்டம் நடக்கவுள்ள நிலையில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நிசார் அலிகானின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-http://www.nakkheeran.in
பழி ஓரிடம் பாவம் ஓரிடம்!