பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர் அத்துமீறலால் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
எல்லையில் போர் ஒப்பந்தத்தையும் மீறி பாகிஸ்தான் ராணுவம் இந்திய பகுதிகளின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ரஜோரி மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 நாட்களாக பள்ளிகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் படிப்பும் தடைப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலையடுத்து குழந்தைகள் பீதியடைந்துள்ளனர். இலைகள் அசையும் சத்தம் கேட்டால் கூட எங்களது பிள்ளைகள் பயத்தால் அலறுகிறார்கள் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், பாகிஸ்தான் அடிக்கடி நடத்தும் தாக்குதலில் பலர் காயம் அடைகின்றனர். ஆனால் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருந்துகளோ, மருத்துவமனைகளோ இங்கு இல்லை. பசி, பட்டினியோடு மக்கள் இறக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
-http://www.nakkheeran.in