இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 16 வயது கனடிய குடிமகன் கூகுள் தேடல் பொறி இயந்திரத்துக்கே சவால் விடுகிறார்.
கனடாவை சேர்ந்த பதினோராம் வகுப்பு மாணவர் அன்மோல் டக்ரெல் என்பவர், கண்டுபிடித்துள்ள தேடல் பொறி, கூகுளைவிட 47% துல்லியமாகவும் சராசரியாக 21% அதிக துல்லியமாகவும் இருப்பதை நிரூபித்துள்ளார்.
அன்மோல் இதை வடிவமைப்பதற்கு 60 நாட்களும், coding செய்வதற்கு 60 மணி நேரமும் மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளார்.
அந்த தேடல் பொறி, கூகுள் நடத்திய ’Google Science fair’ எனும் ஆன்லைன் போட்டிக்காக அன்மோல் வடிவமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தன் 3ம் வகுப்பிலேயே ப்ரோக்ராமிங் படிக்கத் தொடங்கிய அன்மோல், ஸ்டான்ஃபோர்ட் யூனிவர்சிட்டியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பது தன் கனவென்று தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் இப்போதே பெற்றோர் அனுமதியோடு Tacocat Computers என்னும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
அன்மோல் கூறுகையில், இப்போதைய தேடல் பொறிகள் ஒருவருடைய இருப்பிடம், இணைய உலாவல் வரலாறு, மொபைலில் இன்ஸ்டால் செய்துள்ள ஆப்ஸ் போன்றவற்றை கருத்தில் கொண்டே இயங்குகின்றன.
ஆனால் என் தேடல் பொறி ஒருவர் தேடும் வாக்கியத்தில் உள்ள உள்ளர்த்தத்தை ஆராய்ந்து, என்ன மாதிரியான முடிவுகளை விரும்புவார் என்று கணித்து, பிறகே முடிவுகளை வெளியிடும் என்று தெரிவித்துள்ளார்.
-http://www.newindianews.com
கூகள் ஆண்டவருக்கே சவாலா?
ஷபாஸ்!!! வாழ்த்துக்கள். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.
வாழ்த்துகள். மேலும் வளரட்டும் இந்தியர்கள் சாதனைகள்