எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல்… இந்திய ராணுவ அதிகாரி பலியால் பதற்றம்

kashmirஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார். பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒபபந்தத்தை மீறி எல்லைப்பகுதியில் உள்ள இந்திய நிலைகளை குறி வைத்து தாக்குதல் நடத்துவதும், இதற்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுப்பதும் தொடர்ந்து நடைபெறும் நிகழ்வாகிவிட்டது.

இந்நிலையில், நேற்று குப்வாரா மாவட்டத்தில், எல்லைப்பகுதியை ஒட்டியுள்ள நவ்கார் செக்டாரில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியது. இதில், ராணுவத்தின் இளநிலை அதிகாரி ஒருவர் படுகாயம் அடைந்தார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் இறந்துவிட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்திய படைகள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில் டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்தார். அப்போது பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லையில் தொடர்ந்து அத்துமீறுவது உள்ளிட்டவை குறித்து அவர்கள் அவசர ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

கடந்த 23 ஆம் தேதி இந்தியாவுடன் தேசிபாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் அரசு ரத்து செய்த நிலையில் அந்நாட்டு ராணுவம் மீண்டும் அத்துமீறியுள்ளது.

tamil.oneindia.com

TAGS: