பேஸ்புக் சி.ஓ.ஓ. ஷெரில் சாண்ட்பெர்க் 19 வயது இந்திய மாணவன் ஹர்ஷ் சோங்க்ரா என்பவரை அவரது கண்டுபிடிப்புக்காக பாராட்டியுள்ளார்.
ஹர்ஷ் சோங்க்ரா என்ற இந்திய மாணவன் ‘மை சைல்ட்’ எனப்படும் அப்ளிகேசனை உருவாக்கியுள்ளான்.
மூளை வளர்ச்சி குறைபாடுகளால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கண்டுபிடித்து அதற்கான சிகிச்சையை அளிப்பது தொடர்பான அப்ளிகேசனை ஹர்ஷ் சோங்க்ரா உருவாக்கியுள்ளான்.
ஹர்ஷ் சோங்க்ரா சிறுவயதில் மூளை வளர்ச்சி குறைபாடான டிஸ்பராக்சியா நோயால் பாதிக்கப்பட்டதால், தனக்கு ஏற்பட்டது மற்ற குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில் இதனை உருவாக்கியுள்ளார்.
இந்த ஆப்பை ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்துவிட்டு உங்கள் குழந்தையை பற்றி, சில அடிப்படை தகவல்களை மட்டும் செலுத்தினால், உங்கள் குழந்தையிடம் ஏதேனும் குறைபாடு இருக்க வாய்ப்பு இருக்கிறதா என்று கணித்து சொல்லும்.
இந்த ஆப்பை உருவாக்கியதற்காகத் தான் பேஸ்புக் சி.ஓ.ஓ. ஷெரில் சாண்ட்பெர்க், ஹர்ஷ் சோங்க்ராவுக்கு பாராட்டு தெரிவித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-http://www.newindianews.com