காந்தியை சுட பயன்படுத்திய இத்தாலி பிஸ்டலை கொடுத்தது யார் ?

subramaniyan_002புதுடில்லி: தேச பிதா காந்தியை சுடப் பயன்படுத்திய இத்தாலி நாட்டு பெரட்டா பிஸ்டல், இந்தியாவுக்குள் வந்தது எப்படி என்றும் அது குறித்து ஏன் விசாரிக்கப்படவில்லை என்றும் பா.ஜ, தலைவர் சுப்பிரமணிய சுவாமி கேள்வி எழுப்பியுள்ளளார். காந்தி கொலை குறித்து மீண்டும் விசாரிக்க முறையிடுவேன் என்றும் கூறியுள்ளார் .பா.ஜ, தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசுவாமி புது, புது குண்டுகளை போட்டு கலக்கி விடுவதில் அவருக்கே ஒரு தனி பாணி உண்டு . நாட்டை உலுக்கிய ஸ்பெக்ட்ரம், ஜெ, சொத்துக்குவிப்பு , என பல்வேறு விஷயங்களை கிளறி விட்டவர் .

தற்போது மறைந்த காந்தியின் கொலை குறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: காந்தியை கோட்சே சுட்டு கொன்ற போது அவன் பயன்படுத்தியது இத்தாலி நாட்டு பெரட்டா பிஸ்டல் ஆகும் . பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் மட்டுமே அந்த ரக துப்பாக்கியை வைத்திருந்தனர். அப்படியானால் கோட்சேவுக்கு இத்தாலி துப்பாக்கியை கொடுத்தது யார் ? இது கோட்சே எவ்வாறு பெற்றார் ? இது இன்னும் விசாரிக்கப்படாமலே இருக்கிறது . கோட்சே 3 குண்டுகளை பிரயோகித்துள்ளார் . ஆனால் 4 குண்டுகள் இருப்பதாக சில செய்தி ஏஜென்ஸிகள் புகைப்படம் வெளியிட்டுள்ளன . விசாரணையில் 3 குண்டுகள் இருந்தது மட்டுமே கூறப்படுகிறது . 4 வது குண்டு எப்படி வந்தது ? மேலும் காந்தியின் இதய பகுதியை துளைத்த குண்டு எது ? கோட்சே காந்தியை கொல்லும் நோக்கில், 1948 ஜனவரி 20 ம் தேதி நாட்டு குண்டு வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார் பின்னர் ஜனவரி 22 ம் தேதி மவுன்ட்பேட்டனால் விடுதலை செய்யப்பட்டார் . ( காந்தி கொலை 1948 ஜனவரி 30 )

இவ்வாறு சுவாமி கூறியுள்ளார் .

-http://www.dinamalar.com

TAGS: