தமிழகத்தில் செய்யப்படும் முதலீடு லாபமானதாக இருக்கும் என முதல்வர் ஜெயலலிதா உறுதி

தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் இன்று தொடங்கியது.  2 நாள் நடக்கும் இந்த மாநாட்டில்  இந்தியாவில் இருந்து 3 ஆயிரம் பிரதிநிதிகளும், வெளிநாட்டில் இருந்து 1000 பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

முதல்வர் ஜெயலலிதா மாநாட்டை தொடங்கி வைத்தார்.பின்னர் கலைந் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து மாநாட்டின்  சின்னம் அறிமுகபடுத்தப்பட்டது.பின்னர் மாநாட்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் ஞானதேசி கன் வரவேற்றார். மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் பொன் ராதாகிருஷ்ணன்,நிர்மலா சீதாராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டை துவக்கி வைத்து பேசிய முதல்வர் ஜெயலலிதா தென்மாவட்டங்களில் முதலீடு செய்வோருக்கு சலுகைகள் அளிக்கப்படும் சேவைத் துறையில் தமிழகம் இதர மாநிலங்களை விட சிறந்து விளங்குகிறது- தமிழக திட்டங்கள் நிறைவேற மத்திய அமைச்சர்கள் உதவ வேண்டும்: ரூ1 லட்சம் கோடியை தாண்டி முதலீடுகள் வந்துள்ளன தமிழகத்தில் செய்யப்படும் முதலீடு லாபமானதாக இருக்கும் என உறுதி அளிக்கிறேன்:

உலகம் முன்னேறும் போது தமிழகமும் முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும் தமிழ்நாடு அறிவுசார் கேந்திரமாக திகழ்கிறது தொழில் துறையில் முன்னேற தமிழ்நாடு 2023 என்ற இலக்கு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது

தென் மாவட்ட முதலீட்டாளர்களுக்கு வரிச்சலுகை அளித்து ஊக்கமளிப்போம் 30 நாட்களுக்குள் தொழில் தொடங்க அனுமதி அளிப்போம்: காஞ்சிபுரம் அருகே வல்லம் வடகாலில் யமாஹா தொழிற்சாலையை தொடங்குகிறது- சிறு, குறு தொழில்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என கூறினார்.

-http://www.dinamani.com

TAGS: