மொழியை காப்பாற்றினால் தான் தமிழர்களுக்கு மரியாதை: ஆட்சி மொழி பயிலரங்கத்தில் அதிகாரிகள் பேச்சு

tamilnaduதமிழ் வளர்ச்சி துறை சார்பில் ஈரோட்டில், ஆட்சி மொழி பயிலரங்கம் நேற்று துவங்கியது. மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் சந்திரா வரவேற்றார். இயக்குனர் சேகர், மண்டல துணை இயக்குனர் சேகர், உதவி இயக்குனர் குமார் ஆகியோர் பேசினர். கடந்த, 2013-ம் ஆண்டு ஆட்சி மொழி திட்ட செயலாக்கத்தில், சிறந்து விளங்கிய, கோபி மாவட்ட பதிவாளர் அலுவலகத்துக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

விழாவில், கலந்துகொண்ட ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ் தலைமை வகித்து பேசியதாவது:

கட்டிடம் கட்ட, நூல் (கயிறு) எவ்வாறு அவசியமாக உள்ளதோ, அதுபோலவே, வழி தவறி செல்வோரை நெறிப்படுத்துவதாற்கு நூல்கள் (புத்தகம்) வழிகாட்டியாக உள்ளது. தமிழ் மொழியை உயிர் மூச்சாகவே பார்க்கிறேன். ஒவ்வொருவரும் தன் தாய் மொழியை காப்பாற்ற வேண்டும். அப்போது தான் மரியாதை நமக்கு கிடைக்கும். சங்க காலத்தில், நம் முன்னோர்கள்  இயற்கை சார்ந்த இடத்தில் வாழ்ந்தனர். ஆனால், நாகரீகம் என்ற பெயரில் இயற்கையை தொலைத்து வாழ்கிறோம். மொழியை மறந்தால், பிறரின் ஆக்கிரமிப்பு அதிகரிக்கும். கசடுகளை மறந்து, கல்வியை கற்க வேண்டும். அப்போது தான் உயர்வை வாழ்வில் காண முடியும். ஆங்கிலம் பிறர் மொழி. அது நமக்கு தேவை தான். ஆனாலும், நாம் தாய்மொழியை கற்று வளரவேண்டும். அப்போதுதான் நமக்கு உலகளவில் முறையான மரியாதை கிடைக்கும் என அவர் பேசினார்.

சேலம் மண்டல துணை இயக்குனர் செழியன் பேசியதாவது: கேரளா, ஆந்திரா, கர்நாடக மக்கள், தங்கள் தாய் மொழியில் பேசுகின்றனர். சென்னைக்கு வடக்கே சென்றால், ஹிந்தியில் மட்டும் தான் பேசுகின்றனர்.

ஆனால், தமிழகத்தில் அவ்வாறு இல்லை. எல்லோருமே தங்களுடைய பேச்சில் ஆங்கிலம் கலந்தே பேசுகின்றனர். மலையாளத்தில் பேசுவோர், கன்னடத்தில், தெலுங்கில் பிற மொழியை கலப்பு இன்றி, அம்மக்கள் பேசுகின்றனர் என்றார்.

-http://www.nakkheeran.in

TAGS: