நேதாஜி பற்றிய 64 ரகசிய ஆவணங்கள் 18-ம் தேதி வெளியீடு: மம்தா அறிவிப்பால் பரபரப்பு

Netaji_Subhas_Chandra_Boseநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான 64 ஆவணங்கள் வரும் 18-ம் தேதி வெளியிடப்படும் என மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று அறிவித்தார்.

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட முடியாது என்று தகவல் ஆணையத்திற்கு பிரதமர் அலுவலகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆவணங்களை வெளியிட்டால் அது இந்தியாவின் பன்னாட்டு உறவுகளைப் பாதிக்கும் என்றும் கூறியுள்ளது.

இந்நிலையில் நேதாஜி தொடர்பான 1937 முதல் 1947ம் ஆண்டு வரையிலான ஆவணங்களை வெளியிடுவதற்காக அவற்றை கணினிமயமாக்கும் நடவடிக்கை நடந்து வருவதாகவும், 18-ம் தேதி அவற்றை வெளியிட உள்ளதாகவும் மம்தா இன்று கூறியுள்ளார். இதனால், அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

-http://www.nakkheeran.in

TAGS: