ஐஎஸ் அமைப்புக்கு இந்திய முஸ்லிம்கள் வெளியிட்ட “பத்வா”… அமெரிக்கா வரவேற்பு

isis_boystatement_001வாஷிங்டன் : ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு எதிராக இந்திய முஸ்லிம்கள் அமைப்பு பத்வா வெளியிட்டிருப்பதற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.

அல் கொய்தாவை விட மிக மோசமான பயங்கரவாத இயக்கமாக செயல்பட்டு வரும் ஐஎஸ் அமைப்புக்கு எதிராக இந்திய முஸ்லிம் மத தலைவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேர்ந்து பத்வா வெளியிட்டுள்ளனர்.

அதில், வன்முறையை இஸ்லாம் அறவே ஒதுக்குகிறது. ஆனால், ஐஎஸ் அமைப்பு அதை நீடிக்கச் செய்கிறது என்று தெரிவித்துள்ளனர். ஐஎஸ் அமைப்பின் செயல்கள், இஸ்லாம் நெறிகளுக்கு எதிரானது என்றும் பத்வாவில் கூறப்பட்டுள்ளது. இதில், நூற்றுக்கணக்கான இமாம்களும் கையெழுத்திட்டுள்ளனர். இது ஐ.நா. சபைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் மக்கள் அதிகம் வாழும் இந்தியாவில் இருந்து ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக பத்வா வெளியிட்டிருப்பது மிக முக்கிய கருதப்படுகிறது. இதனை வரவேற்பதாக அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் ஹெலேனா ஒயிட் கூறியுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: