இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்


இலங்கை போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை கோரி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுவாக்கெடுப்பு நடத்த ஐ.நாவை இந்தியா வலியுறுத்த தீர்மானத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச விசாரணை கோரும் தீர்மானத்தை ஜெயலலிதா தாக்கல் செய்தார்.

ஒட்டு மொத்த தமிழினத்தின் லட்சியத்திற்கும், இலங்கை வடக்கு மாகாண சபையின் தீர்மானங்களுக்கும் வலு சேர்க்கும் வகையிலும், இலங்கை வாழ் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்யும் வகையிலும், இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்றபோது, சர்வதேச சட்டம் மற்றும் ஜெனிவா ஒப்பந்தத்தில் உள்ள போர் விதிமுறைகளை முற்றிலும் மீறி போர்க் குற்றங்கள் மற்றும் இனப் படுகொலை நிகழ்த்தியவர்கள் அனைவர் மீதும் சர்வதேச விசாரணை நடத்தும் வகையிலான வலுவான தீர்மானத்தினை இந்தியாவே ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு முன்பு அமெரிக்கா உட்பட மற்ற நாடுகளுடன் இணைந்து கொண்டுவர வேண்டும் என்றும், அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவான நிலையை எடுத்தால், அதனை மாற்ற ராஜதந்திர ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியப் பேரரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு தீர்மானத்தை வாசித்தார்.

-http://www.nakkheeran.in

TAGS: