இந்தியா விடுதலை பெற்ற சமயத்தில் சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் இருந்தார்: பரபரப்பு தகவல்

netaji_001இந்தியா விடுதலை பெற்ற சமயத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உயிருடன் தான் இருந்தார் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

நேதாஜி குறித்த சில முக்கிய தகவல்களை பகிரங்கமாக வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், 1948-49 கால கட்டத்தில் நேதாஜி உயிருடன் தான் இருந்தார் என அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் உளவுத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ள செய்தி கிடைத்துள்ளது.

இந்தியா விடுதலை பெற்ற சமயத்தில் தென்கிழக்கு ஆசிய நாடு ஒன்றில் இருந்த நேதாஜி, அந்த பிராந்தியத்தில் இடதுசாரி மறுமலர்ச்சிக்காக பாடுபட்டார் எனவும் கூறப்படுகிறது.

1948ஆம் ஆண்டு மத்திய செய்தி ஒளிப்பரப்பு அமைச்சகம் நேதாஜியின் மருமகன் அமியாநாத் போஸ்சிற்கு அனுப்பிய கடிதத்தில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.

நேதாஜி மறைவு குறித்து கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட தகவல் அறியும் மனுவிற்கு பதிலளித்த மத்திய அரசு, நாட்டு நலனை கருத்தில் கொண்டு விவரங்களை வெளியிட முடியாது என கூறியது குறிப்பிடத்தக்கது.

-http://www.newindianews.com

TAGS: