நேதாஜி பற்றிய ரகசிய ஆவணங்களை வெளியிட மம்தா அக்கறை காட்ட நோக்கம் என்ன?

mamata45கொல்கத்தா: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றிய ரகசிய ஆவணங்களை மேற்கு வங்க அரசு இன்று வெளியிட்டுள்ளது. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட 64 வகை ஆவணங்கள் இன்று வெளியிடப்பட்டு அது கொல்கத்தா, போலீஸ் மியூசியத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசே, தயங்கிய ஒரு விஷயத்தை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செய்துள்ளது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மம்தா இப்போது எடுத்துள்ள இந்த நடவடிக்கை பின்னணியில் சில காரணங்கள் உள்ளதாக ஆய்வாளர்களும், அரசியல் நோக்கர்களும் கருதுகிறார்கள்.

என்ற புத்தகத்தின் ஆசிரியரும், நேதாஜி குறித்த ஆய்வாளருமான அனுஜ் தார் ‘ஒன்இந்தியாவிடம்’ கூறியதாவது: “நேதாஜி குறித்த ஆவணங்களை மம்தா வெளியிட சில காரணங்கள் உள்ளன. மேற்கு வங்க சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், அப்போது, ஆவணங்களை வெளியிட்டு, நேதாஜி ஆதரவாளர்கள் வாக்குகளை பெறலாம் என்பது பிரதமர் நரேந்திரமோடியின் திட்டமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் மோடியுடன் போட்டி போட்டுதான் மம்தா இந்த ஆவணங்களை வெளியிட்டுள்ளார். நேதாஜி தொடர்பாக 135க்கும் மேற்பட்ட ஆவணங்கள் உள்ளன. அதில் 64 ஆவணங்களை மம்தா வெளியிட்டுள்ளார்.

மத்திய அரசிடமுள்ள எஞ்சிய ஆவணங்களில் மேலும் பல முக்கிய தகவல்கள் உள்ளன. மம்தாவின் நடவடிக்கையால், எஞ்சிய ஆவணங்களை வெளியிட வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு சிக்கியுள்ளது.

இப்போது பந்து மத்திய அரசின் கோர்ட்டில் விழுந்துள்ளது” என்றார். நேதாஜியின் வீர சாகசங்களை கேட்டறிந்த தலைமுறையை சேர்ந்த பலர் அவரை ஆதர்ஷ தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர்களை கவருவதற்காக மம்தா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது.

tamil.oneindia.com

TAGS: